விஜேராம என்றாலும் தங்காலை என்றாலும் நான் மஹிந்த ராஜபக்ஷ; ஆணவப் பேச்சு!
மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கொழும்பில் இருந்து தங்காலை சென்ற பின்னர் அவர் இதை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டுக்கு யாரேனும் துரோகம் செய்தால் நான் எழுந்து நிற்பேன்
தனிப்பட்ட பழிவாங்கலை நோக்க மாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக, அதன் விளைவாகஎழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் ஒருபோதும் வருந்தமாட்டேன்.
இந்தத் தாய்நாட்டில் சுதந்திரமாகச்சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன் எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணா மல்போனவர்களுக்காக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான்.
காணா மல்போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி வழக்கறிஞர் மஹிந்தராஜபக்ஷ, தலைவர் – மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன்,தங்கல்லை என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றேன்.
பாத யாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரச எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழி முறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக் காட்டுகள்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்க வில்லை.
ஆனால், சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற் றைத் தாய்நாட்டுக்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்க ளுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற் பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.