கிளிநொச்சியை சேர்ந்த பெண் பிரான்ஸிற்கு ஓட்டம் ; நிர்க்கதியான கணவன் மற்றும் குழந்தைகள்
கிளிநொச்சியை சேர்ந்த குடும்ப பெண் பிரான்ஸில் புலம்பெயர் நிதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவருவருடன் மலர்ந்த காதல் காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் கணவரையும் விட்டு பிரான்ஸிற்கு சென்று புதிய பிள்ளையையும் பெற்றதாகும் தகவல்கள் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் 11 வயது ஆண் பிள்ளை மற்றும் 6 வயது பெண் பிள்ளை என இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து புலம்பெயர் நாடான பிரான்ஸில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, தொலைபேசியில் ஒரு நபருடன் மலந்த காதல் காரணமாக இன்று கணவரும் குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் தவிக்கிறார்கள்.
சட்டரீதியான விவாகரத்து ஏதுமின்றி, வெளிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸ் சென்றடைந்துள்ளார்.
அங்கு சென்று ஏற்கனவே திருமணமான அந்த நபருடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திவருவதுடன், ஒரு குழந்தைக்கும் தாயார் ஆகியுள்ளார்.
மேலும் கணவனுக்கு எயிட்ஸ் இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்துள்ளதாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.