தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்
மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோத்தர்
இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாய் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
82 வயதான இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.