நொடிப்பொழுதில் பறிபோன இளைஞனின் வாழ்க்கை ; அதீத வேகத்தால் வந்த வினை
ஹொரணை, இலிம்பா சந்திக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு காருடன் மோதியதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஹொரணை குருகொட பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது இளைஞர் ஆவார்.

மேலதிக சிகிச்சை
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இங்கிரியவிலிருந்து ஹொரணை நோக்கி வேகமாகச் சென்றபோது, கார் ஒன்றில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து ஹொரணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பதினேழு வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தைத் தொடர்ந்து, காரின் சாரதி ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.