இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா பறிமுதல்
இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கும்பல்
இதன்போது, தூத்துக்குடி மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கிடையிலான ஒருங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவுடன் தொடர்புடைய வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.