யுவதிக்கு மயக்க மருந்து பாலியல் துஸ் பிரயோகம்; மட்டக்களப்பு சட்டத்தரணிக்கு நேர்ந்த கதி!
காத்தான்குடி இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 17ம் ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளிர் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

பலாத்காரமாக கற்பழித்து 3 மாத கர்ப்பிணி
மட்டு நீதிமன்ற கட்டிட தொகுதியில் சட்டத்தரணியாக செயல்பட்டு வரும் சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் கடமையாற்றி வந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பலாத்காரமாக கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் ஜனவரி 30 ஆம் தியன்று திகதி சட்டத்தரணி கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போது, பெப்ரவரி 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து சட்டத்தரணியை செவ்வாய்க்கிழமை (03) அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்டது.
சட்டத்தரணி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகியதுடன் வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், உவைஸ், ரூபி, உதயாகரன், சுதர்சன், கமலதாசன், நஜீபா, ரம்சீயா, தவராசா, சசிதரன், ஆஜராகி சமர்ப்பனங்கள் முன்வைத்தனர்
இதன் போது பொலிஸார் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை .
அதனால் விசாரணை முடியவில்லை என நீதவானிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.