மட்டக்களப்பில் முதாலாளி பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

பொருட்கள் வாங்குவதற்காக இக்கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், இப்பெண் காயமடைந்திருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.