முருகன் முப்பாட்டனா .... சீமானுக்கு குட்டு வைத்த யாழ் சிறுவன்; நாடு கடந்து வைரலாகும் காணொளி!
முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளான்.
அதுமட்டுமல்லாது முருகன் தனது முப்பாட்டன் என கூறும் சீமானுக்கும் போற போக்கில் ஒரு டொக்கு வைத்து விட்டான் யாழ் சிறுவன்.

நாடு கடந்து வைரலாகும் காணொளி..
வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சன்னதி ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலயத்தில் இடம்பெற்ற சிறுவனின் இந்த பேச்சானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ் தேசியம் என கூறி சைவர்களை சிலர் பித்தலாட்டம் செய்து வழிமாற்றி வருகின்றதாகவும் சிறுவன் எச்சரித்துள்ளார்.
அத்துடன் முருகனை முப்பாட்டன் என கூறும் சீமான் ,சைமன், செபஸ்ரியான் போன்றவர்களின் போலி புழுகுகளை நம்பவேண்டாம் என்றும் சிறுவன் சீமானின் காலையும் வாரியுள்ளார்.
இத்தனை சிறிய வயதில் சிறுவனின் இந்த பேருரை சைவ மக்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந் நிலையில் சிறுவன் உருவில் வந்து முருகன் முப்பாட்டனா இறைவனா சிறப்பான பேருரையை வழங்கியது அந்த முருகனா என சமூகவலைத்தளங்களில் முருக பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.