கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் ; 07 சந்தேக நபர்களுடன் கைதான பெண்
கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் 2,67,00,000 ரூபாய் பணத்துடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் திருட்டு
கொழும்பு - புறக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியரிடமிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 300,000 பணமும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் சக்கரவண்டி ஒன்றைச் சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் பயணித்த ஒருவர் அதிகளவான பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 300,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த பணம் புறக்கோட்டை பகுதியில் திருடப்பட்டமை தெரியவந்தது.
இதற்கிடையில், இரண்டு கோடியே 20 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மேலும் 05 சந்தேக நபர்கள் பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கைப்பற்றப்பட்ட பணத்துக்கான உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.