கனடாவை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; 10 பேர் உயிரிழப்பு
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை
அதேவேளை தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.