14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி
கள்ளக்காதல் ஜோடி தகாத உறவில் இருப்பதைப் பார்த்து குடும்பத்தினரிடம் கூறுவதாக மிரட்டிய 10ம் வகுப்பு மாணவனுக்கு களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து கொலை செய்ததாக 19 வயது பெண் மற்றும் 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் பகுதியை சேர்ந்த பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த 6 மாதங்களாக பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஷம் கொடுத்து கொலை
நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
குறித்த பெண் சிறுவனுடன் தவறான முறையில் இருந்ததை உயிரழந்த மாணவன் பார்த்ததாகவும் இதனை இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
இதனால் தங்களது உறவு வெளியே தெரிந்துவிடும் என பயந்த இருவரும், ரவியை கொலை செய்ய திட்டமிட்டு குறித்த மாணவரை நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து குறித்த பெண்ணும் 14 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், 15 வயது பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.