ஜப்பானில் பிரசவத்தின்போது இலங்கைப் பெண் உயிரிழப்பு!
ஜப்பானில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணும், சமூக வலைத்தளங்களில் 'Naomichan' எனப் பிரபலமாக அறியப்பட்டவருமான 33 வயதுடைய ஆஷா நயோமி வீரவர்தன (Asha Nayomi Weerawardhana) பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானியக் கணவர் 'Keichan' உடன் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக முன்னெடுத்து வந்த நயோமி, தங்களது முதல் குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.

குழந்தையின் வருகைக்காக மகிழ்ச்சியுடன் தயாராகி வந்த காட்சி
ஜப்பானில் தனது அன்றாட வாழ்க்கை, குடும்பச் செயற்பாடுகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கணவருடனான அன்பான தருணங்களை YouTube, TikTok உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி வெளியிட்ட காணொளியில்கூட, தனது முதல் குழந்தைக்கான பொருட்களை கணவருடன் இணைந்து வாங்கி, குழந்தையின் வருகைக்காக மகிழ்ச்சியுடன் தயாராகி வந்த காட்சிகளைப் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 10ஆம் திகதி அவரது மரணச் செய்தி வெளியாகியமை அவரைப் பின்தொடர்ந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மருந்து ஒவ்வாமை மற்றும் மருந்தின் அளவு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்ற போதிலும், அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.