பிரபல வைத்தியசாலையில் ரவுடிகளான மருத்துவர்கள்; இருவர் கைகலப்பு!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் இருவர் மோதிகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரனை முன்னெடுக்க வேண்டுமென , அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியா் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.
கைகலப்பில் முடிந்த வாய்த்தா்க்கம்
கடமைகளின் போது ஏற்பட்ட முறுகல் நிலையால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரு வைத்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தா்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதில் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியா் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.