சூனியம் செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது ; விதர்ஷன கன்னங்கர

Sri Lanka Sri Lankan Peoples NPP Government
By Vironika Oct 22, 2026 07:30 PM GMT
Report

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சூனியம் செய்வதாக வெளியாகும் தகவல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அதன் பின்னணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைப் படுகொலை செய்யும் நோக்கம் இருக்கலாம் என்றும் ஜனபலய அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர எச்சரித்துள்ளார்.

கொழும்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

சூனியம் செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது ; விதர்ஷன கன்னங்கர | Witchcraft Is No Joke Says Kannangara

சூனியம்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் போராட்டத்தையும், அங்கு சூனியம் செய்வதாகக் கூறப்படும் செயற்பாடுகளையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

சமூக வலைத்தளங்களில் இவற்றைக் கேலிக்குரிய விடயமாகப் பகிர்ந்தாலும், அவற்றின் பின்னணியையும் நோக்கத்தையும் கவனமாக ஆராய வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உருவப் பொம்மையைப் பயன்படுத்தி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது தலையை ஏழு துண்டுகளாகப் பிளப்பது தொடர்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் பாரதூரமான வன்முறை நோக்கம் இருக்கக்கூடும்.

நீதிமன்ற உத்தரவால் விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்றம் ; குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

நீதிமன்ற உத்தரவால் விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்றம் ; குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முன்னர் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் நாம் நினைவுகூர வேண்டும். பண்டாரநாயக்க படுகொலையின் பின்னணியில் புத்தரக்கித்த தேரர், சோமாராம தேரர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புடைய சதித்திட்டங்கள் காணப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் பல்வேறு சடங்குகள், மந்திரங்கள் மற்றும் சாபமிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இறுதியில் அந்த அரசியல் முரண்பாடுகள் பண்டாரநாயக்கவின் படுகொலையில் முடிவடைந்தன. எனவே, தற்போது இடம்பெறும் செயற்பாடுகளையும் அக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய தேவை உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைப் படுகொலை செய்யும் நோக்கம் இந்தக் குழுவினரின் பின்னணியில் இருக்கக்கூடும் என்பதே எனது சந்தேகமாகும். இது எனது தனிப்பட்ட மதிப்பீடும் சந்தேகமுமாகும். எனினும், அவர்கள் வெளியிடும் கருத்துகளையும் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் கருத்திற்கொள்ளும்போது, நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்.

இரகசிய தகவலால் பிடிபட்ட பெண் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

இரகசிய தகவலால் பிடிபட்ட பெண் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

 

ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளது. பௌத்த மதத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

மதம் சார்ந்த பிரச்சினைகளை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துவது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும். போராட்டத்தில் ஈடுபடுவோர் தமது செயற்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து பொறுப்புடன் சிந்திக்க வேண்டும்.அரசுச் செய்திகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடுகள் ஒரே அளவுகோலில் மதிப்பிடப்பட வேண்டும்.

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் தொழில்முறை அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் சார்பின்றி ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; NPP பிரதேச சபை உறுப்பினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; NPP பிரதேச சபை உறுப்பினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பௌத்த அமைப்புகளுக்குள் காணப்படும் அதிகாரக் கட்டமைப்புகள் மற்றும் நிறுவன ரீதியான பிரச்சினைகள் குறித்தும் ஆராயவேண்டியுள்ளது.

ஞானசார தேரர் சிறையில் காவி உடை அணிவது தொடர்பான சர்ச்சை சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டும். அதனை அரசியல் அழுத்தத்துக்கான கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. ஞானசார தேரர் தொடர்பான வழக்கு 23ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டப்படி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US