ஐரோப்பிய நாடுகளில் அதிகாலை குளிர்காலத்துக்கான நேர மாற்றம்
ஐரோப்பிய நாடுகளில் இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிகாலை குளிர்காலத்துக்குரிய நேரமாற்றம் ஒரு மணிநேர பின்னகர்வாக இடம்பெறவுள்ளது.
உலகில் 1973 ஆம் ஆண்டு உருவாகிய எரிபொருள் நெருக்கடியால் சக்திவள ஆற்றலைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நேர மாற்றத்தின் அடிப்டையில் இன்று அதிகாலை 3 மணி அதிகாலை 2 மணியாக மாற்றப்படும்.
நேரமாற்றம்
ஐரோப்பாவில் இன்று இடம்பெறும் இந்த ஒரு மணிநேர பின்னகர்வு காரணமான இன்று அதிகாலையில் ஒரு மணி நேர மேலதிக தூக்கம் மக்களுக்கு கிட்டும்.

அமெரிக்காவில் இந்த நடைமுறை நவம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் இடம்பெறும் ஐரோப்பாவில் ஆண்டுதோறும் இரண்டு முறை நேரம் மாற்றப்படும்
இந்த நடைமுறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் முன்வைக்கபட்டிருந்தன.
எனினும் இதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய திட்டங்கள் வராததால் இந்த மாற்றம் இன்றுடம் இடம்பெறும் தற்போதைய கைத்தொலைபேசிகள் தானாகவே இந்த நேரத்தை மாற்றுவதால் இந்த நடைமுறையின் சிரமங்கள் பெருமளவில் குறைக்கபட்டுள்ளன.
இந்த நேரமாற்றதால் உடல்நலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுத்தவதான விமர்சனங்களும் உள்ளன.