நாடு முடக்கப்படுமா! இன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது அவ்வாறான தீர்மானத்தை எந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ச்டுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து, பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://jvpnews.com/article/disable-the-country-request-made-government-16285
https://jvpnews.com/article/demand-for-enforcement-of-curfew-1628562514