ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு; தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் ஜனாதிபதி ரணில் கருணை காட்டுவாரா!
சிறைலடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வாரா என்கின்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று (26) ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
சிறை தண்டனை அனுபவித்த ரஞ்சன் ராமநாயக்க நேற்று (25) சத்தியக் கடதாசி சமர்ப்பித்து நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார்.
அத்துடன் தாம் கூறிய கருத்துக்கள் தவறானவை எனவும் அந்த அறிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை
இந்நிலையிலேயே ரஞ்சனுக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.