கையெழுத்திட்டார் ஜனாதிபதி வெளியே வருகிறார் ரஞ்சன்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக சிறைச்சாலை ஆணையாளர் ஒருவர் நீதியமைச்சுக்கு சென்றுள்ளார்.
சிறைச்சாலை திணைக்களத்திற்கு கடிதம் கொண்டு வரப்பட்ட பின்னர், தேவையான ஆவணங்களை தயாரித்து ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க சுமார் ஒரு மணித்தியாலம் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியேற உள்ளதாகவும், தன்னை நேசிக்கும் அனைவரையும் சிறைச்சாலைக்கு வருமாறும் ரஞ்சன் ராமநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.