3 கிலோகிராம் போதைப்பொருளுடன் இருவர் கைது
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று மதியம் 3 கிலோகிராம் கொகேயினுடன் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சர் உதய குமார மற்றும் அதன் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேக நபர்கள் பாணந்துறையின் ஹிரனப் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
2 கிலோகிராம் கொகேயின் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஒரு கிலோ கொகேயின் சொகுசு கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டது.
குறித்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தற்போது சேவையில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் அடையாள அட்டை சந்தேக நபர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடம்பர ஹோட்டல்களில் உள்ள இரவு விடுதிகளில் இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடி டுபாயை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.