மட்டக்களப்பில் தீயிட்டு அழிக்கப்படும் காட்டு மரங்கள்!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காராமுனை காட்டு மரங்களை வெட்டி தீயிட்டு சுமார் 8 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்புக்கான செயற்பாடு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் அதிகார எல்லைக்குட்பட்ட மாங்கேணி 21 ஜி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள வாகனேரி வனப்பகுதியின் காரமுனை கிராமத்துக்கு முன்னாள் உள்ள வனபாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னால் உள்ள இந்த காட்டை கடந்த சில தினங்களுக்கு முன்னாள் சிலர் ஊடுருவி அங்கிருக்கும் பழமைவாய்ந்த மரங்களை வெட்டி விழ்த்தி தீயிட்டு எரித்துள்ளனர்.

இதனால் சுமார் 8 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றதுடன் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

