வைத்தியசாலைக்குள் புகுந்து காட்டு யானை செய்த அட்டகாசம் ; நோயாளிகள் பெரும் அவதி
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை சேதப்படுத்தியுள்ளது.
சொத்துக்களுக்கு சேதம்
இதையடுத்து ஊழியர்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டியடித்துள்ளனர்.
காட்டு யானைகள் அடிக்கடி மருத்துவமனையைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்ற தாங்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைளும் எடுக்காதிருப்பதாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.