வாக்களிக்க வந்த அழையா விருந்தாளியால் ஸ்தம்பித்து போன வாக்குச்சாவடி ; சிதறி ஓடிய வாக்காளர்கள்
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்தது.

நீண்ட போராட்டம்
யானையைக் கண்டதும் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
நிலைமை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.