கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்! காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம்; எங்கு தெரியுமா?
திருமணம் என்பது ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே ஆகும். இதுவே பெரியவர்கள் கூறும் அறிவுரையும் ஆகும்.இந்நிலையில் முதல் மனைவிகளஏ தங்கள் கணவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் ஆச்சர்ய சம்பவம் கிராமம் ஒன்றில் கடைப்பிடிக்கபப்டு வருகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவி தனது கணவனுக்கு இரண்டாவதாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் விநோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
பழமையான பழக்க வழக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமத்து மக்கள் இன்னும் தங்களது பழமையான பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
அத்துடன் முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமணத்துக்கு தயாராவது, மணப்பெண்ணை வரவேற்பது முதல் மணமக்களின் படுக்கையை தயாரிப்பது வரை அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார்.
ஒரே ஆணை திருமணம் செய்துகொள்ளும் இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை போல வாழ்கின்றனர். அவர்களுக்குள் சண்டையே வருவதில்லை என்று கூறுகின்றனர்.
முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது
கிராம வாசிகள். இப்படி வித்தியாசமான பழக்கத்திற்கு முக்கியமான காரணம் ஒன்றையும் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த கிராமத்தை பொறுத்தவரை முதலில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்பது ஐதீகம்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் அது பெண் குழந்தையாகத் தான் பிறக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆணும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இக்கிராம மக்களின் விநோத முறை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சில இளஞர்கள் இந்த பழக்கத்திற்கு நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்களாம்.