31 வயது கணவரை கொலை செய்த 21 வயது மனைவி; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!
மது போதையில் மனைவியை தொடர்ந்து தாக்கிய கணவரை 21 வயது மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் புலஸ்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மனைவி மீது தொடர்ச்சியாக தாக்குதல்
31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான உயிரிழந்தவர் மது அருந்திவிட்டு தனது 21 வயது மனைவியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறே மது அருந்திவிட்டு மீண்டும் ஒரு தடவை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதையடுத்து பெண் தற்காப்புக்காக கத்தியால் குத்திக் கணவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மனைவி கைதுசெய்யப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.