கருப்பு பூஞ்சையால் மனைவி உயிரிழப்பு; கணவரின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி
இந்தியாவின் கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல் 46 வயதுடைய கணவர், அவரது 4 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவிற்கு உட்பட்ட போரகல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கோவிட்-19 தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை பாதித்த தனது மனைவி ஜெயா உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத கோபாலா (46), தனது பிள்ளைகள் சௌமியா (19), ஸ்வேதா(16), சாக்ஷி(11) மற்றும் ஸ்ருஜன் ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மனைவி இல்லாமல் வாழ முடியாது என குறித்த நபர் கூறிக்கொண்டே இருந்ததாக உறவினர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்ரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.