விமானக் கண்காட்சியில் சிதறிய இந்திய போர்விமானம் ; விமானி பலி
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்துக்கொண்டிருந்த இந்திய போர் விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே வீழ்ந்து , வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே வீழ்ந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானியால் உயிர் தப்ப முடிவில்லை எனக் கூறப்படுகின்றது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.