வெளியுறவுத்துறை மீது ஆர்வம் வந்தது ஏன்? ஜெய்சங்கர் சொன்ன செம்ம பதில்!
‛‛வெளிநாட்டு மியூசிக், உணவு மீதான நாட்டம் தான் வெளிநாட்டு சேவை துறையில்(Foreign services) பணி செய்யும் ஆர்வத்தை அதிகரித்தது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மாணவ-மாணவர்களுடனான கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர்(Jaisankar) . இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
வெளியுறவுத் துறையில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் இந்தியா-அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நேற்று வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Anthony Blingen), ராணுவத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின்(Lloyd Austin) ஆகியோரை முறையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(Jaisankar), ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்(Rajnath Singh)ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த வேளையில் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக ஆண்டனி பிளிங்கன்(Anthony Blingen), ஜெய்சங்கர் ஆகியோர் ஹோவர்ட் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்(Jaisankar) ஒருவர், ‛‛வெளிநாடுகளின் உறவுகள் தொடர்பான இந்த துறை மீது அதிக நாட்டம் வந்தது எப்போது?இதற்கான காரணம் என்ன?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு புன்சிரிப்போடு ஜெய்சங்கர் (Jaisankar) பதிலளித்தார்.
அவர் எனக்கு வெளிநாடுகள் மீது ஆர்வம் வர மியூசிக் தான் காரணம். உங்கள் சொந்த நாட்டின் மியூசிக்கிற்கு அப்பாற்பட்டு புதிய இசையை நீங்கள் கேட்கும்போது வியந்து இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான மியூசிக் உள்ளது.
இதை கேட்கும்போது அது எந்த மாதிரியான இசை. அது எந்த வகை கருவியில் இருந்து வருகிறது என்பதற்கான ஆவல் ஏற்பட்டது. நான் முதன்முதலில் 1959ல் அமெரிக்காவில் 'தி ஹிட்மேக்கர்ஸ்' ஆல்பம் கேட்டேன். இது அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்போதும் அதை நினைவில் வைத்து அடிக்கடி கேட்டு வருகிறேன். வெளிநாடுகள் மீதான ஆர்வத்துக்கு மியூசிக் தான் முதன்மையானது. இதற்கு அடுத்ததாக உணவு மற்றும் குடும்ப சூழலையும் கூறுவேன். இளமையாக இருக்கும்போது உணவை விட இசையே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
இதனால் தான் இசைக்கு அடுத்து உணவை ஒரு காரணமாக கூறுகிறேன். மேலும் குடும்ப சூழலும் ஒரு காரணமாகும். நான் 10 வயதாக இருந்தபோது எனது தந்தை பணி நிமித்தமாக அமெரிக்கா வந்தார்.
இங்கு படிக்கவும் சில வகையான தொழில்முறை பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவர் பயணப்பட்டார். இதுவும் வெளிநாடுகள் மீதான நாட்டத்தை அதிகரித்தன" என்றார்.