யாழில் நேர்ந்த துயரம் ; பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை
யாழ்ப்பாணத்தில் இரு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தைக்கு நேற்று இரவு தாயார் பாலூட்டியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் இன்று அதிகாலை குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில், குழந்தையின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத காரணத்தால், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.