இவர்களை நிச்சயம் பிரதமர் ஆக்கமாட்டோம் - லக்ஸ்மன் கிரியெல்ல
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல, தமது கட்சியின் பாராளுமன்றக் குழுவோ அல்லது செயற்குழுவோ இது தொடர்பில் கலந்துரையாடவில்லை என தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையாக உழைத்து வருவதாகவும், பிரதமர் பதவிக்கு வெளிநாட்டினரைக் கொண்டுவர மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பகிர்ந்து கொண்டதாகவும், தமது கட்சியில் அவ்வாறான எதிர்ப்பு எதுவும் இல்லை எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.