நமிதா வெளியே சென்றது ஏன்? பிக்பாஸ் வீட்டின் உண்மையை போட்டுடைத்த நாடியா!
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர் .
மேலும் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை கலந்து கொண்டிருந்த நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு பலரும் பல காரணங்கள் வெளியான நிலையில், நமிதா மாரிமுத்துவை தொடர்ந்து நாடியா சாங் எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனையடுத்து ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்த நிலையில் தொகுப்பாளர், குறிப்பாக நமீதா வெளியேறியதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நாடியா சாங் ,
உடல்நிலை காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டதை அடுத்து, நாடியா சாங் நேரடியாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நமீதா ஏன் வெளியேறினார்?” என தொகுப்பாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதில் அளித்த நாடியா, “நாடியா நேரடியாக தான் பேசுவார். இந்த இடத்தில் அதை சொல்ல முடியாத சூழ்நிலை. சொல்லவும் கூடாது. ஆனால் ஒரு விஷயம் அவர் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். மிகவும் வலிகளைத் தாண்டி வந்த ஒரு பெண்மணி நமிதா மாரிமுத்து. அத்தோடு அந்த வீட்டில் எனக்கு கனெக்ட் ஆன முதல் நபர் அவர். முதல் வாரத்திலேயே அந்த வீட்டில் இருக்கும் எல்லாரையும் பற்றியும் அவர் வைத்த கணிப்பு சரி என்பதை, அவர் வெளியேறிய பின் உணர்ந்த ஒரு ஆள் நான். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறி விட்டார் நாடியா கூறியுள்ளார்.