சற்று முன்னர் பாரிய மண்சரிவு ; ஒருவர் பலி, நான்கு பேர் காயம்
கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கனேதென்ன பிரதேசத்தில் கண்டி-கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு விற்பனை நிலையத்தின் மீதே ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக, பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.