சிவபெருமான் யாருடைய ஆள்? யாழில் தூண்டித்துருவிய படையினர்!

Sulokshi
Report this article
சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக யாழ் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டை செய்த பின்னர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம்.
அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள். நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம்.
அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று நாங்கள் கூறினோம். அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம் ஒரு சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது.
குறிப்பாக விழ விழ எழும்புவோம் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் அவ்வாறுதான் யுத்த காலத்தில் கூட, எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்தவீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வழங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற வாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
You My Like This Video