பிக் பாஸ் வீட்டிலிருந்து இவ்வாரம் வெளியேறுபவர் யார்?; பயமின்றி நக்கலாக பதில் சொல்லும் மாயா
இந்திய பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து நாளாந்தம் பிரச்சினைகளுடன் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் மாயா குழுவினர் பிரதீப் மீது குற்றம் சாட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.
இவ்விடயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நக்கலாக பதில் சொல்லும் மாயா
இந்நிலையில் தலைவராகவிருக்கும் மாயா குழுவினர் வார இறுதியில் தவறுகள் குறித்து கமல் சார் கேட்டு எம்மைத் திட்டும் போது சாரி சார் என்று சொல்லிவிடுவோம் என நக்கலாக கூறியுள்ளார்.
கமல் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் மாயா இப்பதிலைதான் கூறவுள்ளார் என்ற விடயம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
மாயா உட்பட அவரது குழுவினரின் செயற்பாடுகளின் மூலம் கமல் சார் மீது பயம் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாரம் வெளியேற்றப்படுபவர்
இவ்வார அத்தியாயம் அதிகமான மக்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் அத்தியாயமாக இருக்கிறது.
மேலும் பிக்பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்த அர்ச்சனாதான் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அதே சமயத்தில் பூர்ணிமா ,ஐஷு மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்று இறுதியிடத்தில் இருப்பதால் இவர்களில் ஒருவர்தான் விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.