12ஆம் திகதிக்கு பின் கோட்டாபய ஆட்சியை இழப்பார் - பிரபல சோதிடர் ஆரூடம்
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை தீவிரமடையும் என பிரபல சோதிடர் தெரிவித்துள்ளார்.
ஜுலை 09 ஆம் திகதி மற்றும் அதனைச் சூழவுள்ள நாட்களில் மேலும் தீவிரமடையும் என சோதிடர் கே.ஏ.யு.சரச்சந்திர தெரிவித்துள்ளார்.
9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிடுகின்றார். 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
12ஆம் திகதி ஏற்படும் கிரக நிலை மாற்றம் நாட்டின் தலைவருக்கு பொருத்தமற்றதாகும். கிரக நிலை இடம்பெயர்வினால் தலைவர் பதவியை இழப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கிரக நிலை மாற்றம் தற்போதைய அரசாங்கத்திற்கும் நன்மையை ஏற்படுத்தாது. நாட்டிற்கு புதிய தலைவர் வருவார். அதுவும் தற்போது அரசியலில் உள்ள ஒரு தலைவரே நாட்டின் அதிகாரத்தை ஏற்பார். அவர் ஒரு சக்தியுடனேயே அதிகாரத்திற்கு வருவார்.
அத்துடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவிலேயே நாட்டிற்கு ஒரு சில நெருக்கடி நிலை தீரும். 9ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் ஏற்படும் கிரக மாற்றம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.