பிற்பகல் கடும் மழைக்கு வாய்ப்பு
இன்று பிற்பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள அறிக்கையில்,
75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.