காருக்குள் காதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி;காணொளி எடுத்து பொலிஸ் செய்த காரியம்
இந்தியாவின் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்ததை காணொளி எடுத்த பொலிஸ் அதிகாரி, மாணவியை காணொளியை காட்டி அச்சுறுத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அப்போது, ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது.
பின் தொடர்ந்த பொலிஸ் அதிகாரி
அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது பின்தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்தி நிறுத்தி தான் ஒரு காவலர் என முதலில் கூறியுள்ளார்.
பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி தன் ஆசைக்கு இணங்கும் படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை , காதலனுடன் இருந்த காணொளியை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
படியிலேயே வைத்து பலாத்காரம்
இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவி கதறிய படி காதலனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி உதவியால் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.