அன்று ரணில் சொன்னது இன்று பலிக்கிறது!
இலங்கைக்கு முடிவுறுத்துபவர் ”டெர்மினேட்டர்” தேவையில்லை! 2019ல் ரணில் சொன்னவை, "உங்களிடம் முடிவுறுத்துபவர் ஒருவர் இருந்தால், அவர் உங்கள் வாழ்க்கையை முடிவுறுத்துவார்" என 10.08.2019ல் அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்க சொன்னவை இன்று யதார்த்தமாக நடக்கிறது.
இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிமசிங்க மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. அதேவேளை அவர் ஒரு தரமான அரசியல்வாதி என்பதனையும் மறுக்க முடியாது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு ”டெர்மினேட்டர்” என (10.08.2019ல்) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பசில் ராஜபக்ஸ சொன்னார். அப்போது ரேமினேஸன் குறித்து நிறைய அனுபவங்கள் உண்டு என நான் சொன்னே்.
அதாவது அங்கு ”டெர்மினேட்டர்” ஒருவர் இருந்தால்,
1) ஜனநாயகம் ஒழிக்கப்படும்.
2) கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்.
3) உச்ச நீதிமன்றின் சுத்திரம் பறிக்கப்படும்.
4) அனுபவிக்கும் அனைத்து சுதந்திரமும் இல்லாது ஒழிக்கப்படும்.
5) பொருளாதாரம் முடக்கப்படும்.
6) சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும்.
7) நாட்டுக்கு முதலீடுகள் வருவது முடிவுறுத்தப்படும்.
8) உல்லாசப்பயணிகள் நாட்டுக்கு வருவது முடிவுக்கு வரும்.
9) பெண்களின் பாதுகாப்பு முடிவுக்கு கொண்டுவரப்படும்.
10) கல்வி முடிவுக்கு வரும். 11) சுவசரிய மருத்துவ வசதிகள் நிறுத்தப்படும்.
12) சுகாதார அபிவித்தி முடிவுறுத்தப்படும்.
13) அங்கு வீடமைப்பு நிர்மானங்கள் முடிவுறுத்தப்படும்.
இப்போது நான் சொல்கிறேன் "உங்களிடம் முடிவுறுத்துபவர் ஒருவர் இருந்தால், அவர் உங்கள் வாழ்க்கையை முடிவுறுத்துவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆகவே உங்கள் எதிர்காலத்தை முடிவுறுத்த விரும்புகிறீர்களா?" என 2 வருடங்களுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க சிங்கள மக்களிடம் கேட்டு இருந்தார்.
அதனை இப்போது அவர்கள் நிஜத்தில் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.