கணவனுக்கு கள்ளத்தொடர்பு ; பெண் செய்த சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சி
இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது பிறப்புறுப்புகளைத் துண்டித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் கௌஷிக் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பாதிக்கப்பட்ட நபர் கூலி வீலை செய்யும் வபர் என கூறப்படுகின்றது . கவலைக்கிடமான நிலையில், அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகவே அடிக்கடி குடும்பச் சண்டைகள்
காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணான திரௌபதி பாய், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டு வந்ததால், அந்தத் தம்பதியினரிடையே நீண்ட காலமாகவே அடிக்கடி குடும்பச் சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன.
சம்பவம் நடந்த அன்று இரவு, அந்தத் தம்பதியினர் ஒன்றாக இரவு உணவு அருந்திய பிறகு உறங்கச் சென்றதாகக் கூறப்படுகின்றது. நள்ளிரவு நேரத்தில், ராஜேஷ் உறங்கிக்கொண்டிருந்தபோது, தாக்கி பிறப்புறுப்புகளைத் துண்டித்து காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மனவியின் செயலால் அலறிதுடித்த கணவன் அறையிலிருந்து வெளியே ஓடிவந்து உதவி கேட்டு கூக்குரலிட்டுள்ளார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைத்த உறவினர்கள் குடும்பத்தினர் ராஜேஷையும், துண்டிக்கப்பட்ட அவரது உடல் உறுப்பையும் எடுத்துக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, கணவனை தாக்கிய பெண்ணை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஈற்படுத்தியுள்ளது.