அதிகமாக ஆயில் சேர்த்தால் உடலுக்கு இத்தனை பிரச்சினைகளா?
நமது உணவுகளில் எண்ணெய் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பொறிப்பதற்கும் சரி, வறுப்பதற்கும் சரி, உணவின் சுவையை கூட்டுவதற்கும் சரி எண்ணெய்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
அதிகமான எண்ணெய் பயன்பாட்டால் எவ்வாறான உடல்நலப் பிரச்னைகள் வரும் என்பதை நாம் இங்கு காணலாம்.
உடல் எடை அதிகரிப்பு
அதிகமான எண்ணெய்யை உட்கொள்வதால் உங்களின் உடல் எடை எக்குத்தப்பாக ஏறும். அதாவது, இதுதான் முதல் பிரச்னையாகும். கலோரிகள் அடர்த்தியாகும். அதாவது குறைந்த அளவிலான உணவை எடுத்துக்கொண்டால் அதன் கலோரி அதிகமாக இருக்கும். இதுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம்.
செரிமான பிரச்னை வரலாம்
அதிகமான எண்ணெய் உட்கொள்வது செரிமானத்தை சீர்குலைக்கும், இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் அதிக கொழுப்புள்ள உணவுகள், செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் சரியாக செரிமானம் ஆகாதது, அசிடிட்டி, உப்புசம் உள்ளிட்ட பிரச்னைகள் வரும்.
கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்
ஆரோக்கியமான எண்ணெய் என சொல்லப்படும் ஆல்வி எண்ணெய்யை கூட நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவே செய்யும். எனவே நீங்கள் அதனை குறைவாக பயன்படுத்துவதே நலம்.
கல்லீரல் பாதிக்கலாம்
அதிகமான கொழுப்பை எடுத்துக்கொள்வதால் அதனை செயல்படுத்தி, உடலில் தேக்கிவைப்பது கடினம். இவை அதிகமாகும் போது கல்லீரல் செல்களிலேயே கொழுப்புகள் படியும். எனவே கல்லீரல் பாதிக்கப்படலாம்.