18 வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; அதீத வேகத்தால் விபரீதம்
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - மஹியங்கனை வீதியின் 21 ஆம் மைல்கல் தூணிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (12) பகல் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து, எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மெதமஹநுவர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.