இன்று கார்த்திகை மஹா தீபம்...எந்த இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்? அவசியம் அறிந்து கொள்ளுங்கள்
இன்று கார்த்திகை மஹா தீப நாளாகும். இலங்கையில் நேற்றையதினம் கொண்டாடப்பட்டிருந்தாலும் , இந்தியாவில் இன்றுதான் கார்த்திகை மஹா தீபம் கொண்டாடப்படுகின்றது .
கார்த்திகை தீபத்தின் சிறப்பே வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தீபங்களை ஏற்றி வழிபடுவது தான்.
வீட்டிலோ அல்லது கோவிலிலோ தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூறினால் குடும்பத்தில் ஐஷ்வர்யம் பெருகும் .
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

இதன் பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும் அஆனந்தம் பெறட்டும் என்பது இம் மந்திரத்தின் பொருள்.
தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:
தீப வழிப்பாடு நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது. தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், தீய சக்திகள் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஆரோக்கியம், தனவரவு ஆகியவை பெருகும்.
கார்த்திகை தீபத்தின் சிறப்பே வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தீபங்களை ஏற்றி வழிபடுவது தான்.
பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷங்கள் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டிற்குள் நுழையாது.
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும்.
கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் ஆகாச தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.



