இலஞ்சம் பெற முயன்ற வவுனியா நெடுங்கேணி பொலிஸ்; காத்திருந்த அதிர்ச்சி!
வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் பெற முயன்ற போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு
குறித்த பொலிஸ் சார்ஜன் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் சார்ஜன் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெற முற்ப்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் இன்று வியாழக்கிழமை (20) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.