மட்டக்களப்பு மாநகர சபைக்குள் நடப்பது என்ன?
மட்டக்களப்பு மாநகரில் உள்ள பழுதடைந்த வீதி விளக்குகளை சரி செய்ய மக்கள் கோரியிருந்த நிலையில் மாநகர சபையில் நிதி இல்லை என தெரிவித்துள்ளனர்.
சடலங்களை தகனசாலை அமைக்க மாநகர சபையில் நிதியில்லை, புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் உதவ முன்வர வேண்டும் என நபர் ஒருவர் முகநூல் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தற்போது தனது வாகனத்தில் பாடலை கேட்டப்டி செல்ல வாகனத்தின் அட்டனாவை சரி செய்ய 55,000 ரூபாய் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்றே அம்பாறைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அத்தோடு முதல்வரது வாகனத்தின் திருத்த வேலைக்காக 22 இலட்சம் ரூபாய் ஒதுக்க மாத்திரம் மாநகர சபையிடம் எப்படி நிதி வந்தது? இங்கையே இப்பிடி என்றால் உங்களை எல்லாம் நம்பி நாடாளுமன்றமோ, மாகாணசபைகோ அனுப்பினால் என நடக்கும் என குறித்த நபர் விமர்னத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கோப்புக்களில் இருந்து ஆவணங்கள் வெளியில் செல்கிறது என்றால் அங்கு ஒரு அதிகாரம் வாய்ந்த அதிகாரிரிகள் இல்லையா? அல்லது ரகசியம் பேணல் இல்லையா? யார் வேண்டும் என்றாலும்யாரது ஆவணங்களையும் பிரதி எடுக்கலாமா? என சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் பிரதம செயலாளர், கிழக்கு மாகாணம் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.