கோர விபத்தில் 19 வயது இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த கதி!
மாதம்பை காக்காப்பள்ளிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பை , காக்காப்பள்ளிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு காக்காப்பள்ளிய பகுதியிலிருந்து மெதகம பகுதியை நோக்கிப் பயணம் செய்த டிமோ பட்டா ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக இருந்து பயணம் செய்தவர் தொடர்ந்தும் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.