வகுப்பறையில் மாணவிகளை கொண்டு தன் கால்களை மசாஜ் செய்த ஆசிரியை!
ஆசிரியை ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆசிரியை சஸ்பெண்ட்
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார்.
அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த பெற்றோர்கள் பலர் அந்த ஆசிரியையின் செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆசிரியையை ஸ்ரீகாகுளம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஜெகன்னாத் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.