யாழ் யூனியன் கல்லூரியில் நேற்றையதினம் நடந்தது என்ன? வெளியான பின்னனி
இற்றைக்கு 200வருடங்களுக்கு முன்பு அமெரிக்க மிஷனறிகளினால் ஆரம்பிக்கப்பட்டதுதான் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி. இதற்கு ஆதாரமாக இன்றும்,மிஷனறிகளான டிக்சஷன், சிமித்,வோர்ட் போன்றவர்களுடைய பெயர்களில் இல்லங்கள் உண்டு. அத்துடன் அவர்களுடைய சமாதிகளும் அங்கு உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க மிஷனறிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தேவாலயமும் அங்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் தேவாலயத்திற்கு பாதிரியாராக வருபவர் தங்கும் உத்தியோகபூர்வ வீடும் வளவும் அங்கு உண்டு.
இந்த நிலையில் 1990களின் முற்பகுதியில், பாதிரியாரின் வீட்டு காணிக்குள் யூனியன் கல்லூரி மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை தரிப்பதையிட்டு பாதிரியாரோ அல்லது தேவாலய நிர்வாகமோ எவ்வித எதிர்ப்புகளையும் செய்தது இல்லை என கூறப்படுகின்றது.
எனினும் , அண்மைக்காலமாக யூனியன் கல்லூரி நிர்வாகம், பாதிரியாராக வருபவர் தங்கும் உத்தியோகபூர்வ வீடும் வளவும் தங்களுக்குத்தான் உரிமையென்று மாணவர்களை உசுப்பேத்திவருவது தெல்லிப்பளை வாழ் மக்கள் அனைவரும் அறிந்ததே.
இதன் காரணமாகவே கல்லூரி நிர்வாகத்தினரால் உசுப்பேத்தப்பட்ட மாணவர்கள், பாதிரியாரின் வளவிற்குள் புக, அதை தடுக்க அமெரிக்க மிஷனரிகள் களத்தில் இறங்கிவிட்டதாக முகநூல் வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.