விபத்தில் பலியான விமானிக்கு பட்டச் சான்றிதழ்
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) இன் பட்டச் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றது.

இறுதிச் சடங்கு நாளை
லுணுவில பகுதியில் நிவாரணத்துக்காக சென்றிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருந்தது. இதில் விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.
அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் (Nirmal Siyambalapitiya) பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், அவருக்குரிய (Nirmal Siyambalapitiya) பட்டச் சான்றிதழ் அவருடைய பூதவுடலுக்கு சமர்பிக்கப்பட்டது. உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் , நாளைய தினம் (04.12.2025) முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற்றவுள்ளன.