நிவாரணம் கொடுக்க சென்ற தயாசிறி ஜயசேகர மக்களால் விரட்டியடிப்பு!
டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
அந்தவகையில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற அரசியல்வாதி தயாசிறி ஜயசேகரவும் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் முறைப்பாடுகள்
இந் நிலையில் சில அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பசியுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கும் உதவி செய்ய சென்ற குழுவினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சில பகுதிகளுக்கு அனுதாபம் தேடும் வகையில், வீடியோ குழுவினருடன் சென்ற பல அரசியல்வாதிகள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவங்களும் ஆங்காங்கே பதிவாகியுள்ளன.