வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை

CID - Sri Lanka Police Dubai Money Gun Shooting Lasantha Wickramasekara
By Sahana Oct 27, 2025 03:48 PM GMT
Report

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி, ரூ. 20 இலட்சத்துக்கான ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ். நல்லூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெறும் சூரன்போர் காட்சி

யாழ். நல்லூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெறும் சூரன்போர் காட்சி

"டுபாய் லொக்கா" என்ற நபர் இந்த ஒப்பந்தத்தை தமக்கு வழங்கியதாக துப்பாக்கிதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளிகளில் சந்தேக நபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள், அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரிந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.

வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை | Weligama Gunman Arrested Secret Hunt Authorities

அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கெகிராவ, பொனேகம பகுதியில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றில் மறைந்திருந்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

எனினும், துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்பட்ட நபர் காவல்துறையினருடன் போராடித் தப்பிச் சென்றார். 

கெகிராவையிலிருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கொழும்புக்கு வந்துள்ளமை தொலைபேசித் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படை இணைந்து கொழும்பின் பல பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டன. சந்தேகநபர் பொரளை, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது, தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் தலைமுடியை வெட்டி, தனது உடைகளையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

அவர் அங்கு ஏதோ ஒரு போதைப்பொருளை உட்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர் தனது கைபேசிக்கு மின்னேற்றம் செய்து கொள்வதற்காக அதனை தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். காவல்துறை சோதனையின்போது, அந்தத் தொலைபேசி மீட்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், தொலைபேசித் தரவுகளின் கண்காணிப்பு மூலம், சந்தேகநபர் இராஜகிரிய பகுதிக்கு சென்று மாலை 6 மணியளவில் மஹரகம, நாவின்ன பகுதிக்கு சென்றமை தெரியவந்தது.

வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை | Weligama Gunman Arrested Secret Hunt Authorities

அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப் படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் அவர் நேற்றிரவு (26) மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்வதற்காக ரூ. 20 இலட்சம் பெறுமதியான ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம் "டுபாய் லொக்கா" என்ற நபரால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒப்பந்தத் தொகையில் ரூ. 12 இலட்சம் கடந்த 22ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. ஒன்றரை இலட்சம் பணத்தைப் பெறுவதற்காகவே சந்தேகநபர் நாவின்ன பகுதிக்கு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

டுபாயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக, நாவின்ன பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ரூ. ஒன்றரை இலட்சம் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6:30 அளவில் அந்த இடத்துக்கு வந்த துப்பாக்கிதாரி, பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மஹரகம நோக்கிச் செல்வதற்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, விசேட அதிரடிப் படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கண்காணித்தனர்.

வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை | Weligama Gunman Arrested Secret Hunt Authorities

மஹரகம நகரின் மையத்தில் உள்ள அரச மரம் அருகே சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது, அவர் முச்சக்கர வண்டியில் இருந்து குதித்து, போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஹை லெவல் வீதி வழியாக சுமார் 600 மீற்றர் தூரம் கொழும்பு நோக்கி ஓடி, அருகில் இருந்த வாகன திருத்துமிடத்துடனான வாகன தரிப்பிடமொன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அதன்போது, அங்கு இருந்த நபர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் மாலை 6:45 அளவில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் இடது கையில் முழங்கைக்குக் கீழ் "ஹிதுமதே ஜீவிதய" (இஷ்டப்படி வாழும் வாழ்க்கை) என்றும், வலது கையில் "அனுராதா" என்றும், மார்பின் இடது பக்கத்தில் மனைவியினுடையது என கருதப்படும் பெயரையும் வலது பக்கத்தில் "சசந்தி துவ" (சசந்தி மகள்) என்றும் பச்சை குத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  

புதுப்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டம் ; உலக வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

புதுப்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டம் ; உலக வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US