மடமடவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்க
அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இதற்கு, உணவுக் கட்டுப்பாட்டுடன், உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், இதனுடன் சில குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும். இவை உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய பழங்களில் கிவி பழமும் ஒன்றாகும்.
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதிகரித்து வரும் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். நீங்கள் கிவி பழம் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த வழிகளில் கிவியை உங்கள் உணவில் சேர்க்கலாம்.
கிவி மூலம் எப்படி உடல் எடையை குறைப்பகிறது?
இந்த வழிகளில் கிவியை உட்கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்
கிவி ஸ்மூத்தி : உடல் எடையைக் குறைக்க கிவி ஸ்மூத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, ஒன்று முதல் இரண்டு புதிய கிவி பழங்களில் முதலில் தோல் உரித்துக்கொள்ளவும்.
இப்போது அதில் தயிர், பாதாம் மற்றும் சில துளிகள் தேன் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து ஸ்மூத்தியாக தயார் செய்யவும். இந்த ஸ்மூத்தியை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதனால் அதிகரித்து வரும் உடல் எடையில் இருந்து விடுபடலாம்.
சாலட் ப்ளேட்டர் : நீங்கள் சாலட் தொகுப்பில் கிவி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் அனைத்து சாலட்டுக்கான காய்கள் மற்றும் பழங்களை நறுக்கும் போது கிவியையும் நறுக்கி அவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இந்த வழியில், உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம்.
கிவி பானம் : கிவியை தோலுரித்து பொடியாக நறுக்கவும். அதன் பிறகு, நடுத்தர அளவிலான வெள்ளரிக்காயை வெட்டி இரண்டையும் மிக்சியில் அரைக்கவும். இதற்குப் பிறகு, தயாரிக்கப்பட்ட பேஸ்டில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கிளாஸில் ஊற்றவேண்டும்.
அதற்கு மேலே இருந்து கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இந்த பானத்தை காலையிலும் மாலையிலும் குடிக்கவும். இதனால் உடலில் உள்ள கொழுப்பை எளிதாக வெளியேற்றலாம்.